12th Office Management | நிர்வாகத்தின் கோட்பாடுகள் Book Answers
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
1. ஒரு _____முதன்மையாக நிறுவனத்தில் தினசரி வழக்கமான செயல்களை நிர்வகிக்கிறார்.
(அ) மேலாளர்
(ஆ) எழுத்தர்
(இ அதிகாரி
(ஈ) நிர்வாகி
Answer : (அ) மேலாளர்
2. ___என்பது "மற்றவர்கள் மூலம் வேலைகளைச் செய்தல்".
(அ) நிர்வாகம்
(ஆ) மேலாண்மை
(இ) திறமை
(ஈ) ஒழுங்கமைத்தல்
Answer : (ஆ) மேலாண்மை
3. ஒரு அமைப்பின் வெற்றி என்பது அதில் அடங்கியுள்ள தனி நபர்களின் ஒன்றிணைந்த முயற்சிகள் சார்ந்த, ____தான் அடங்கியுள்ளது.
(அ) குழு செயற்பாட்டில்
(ஆ) தனி நபர் செயற்பாட்டில்
(இ) தனி செயற்பாட்டில்
(ஈ) சங்க செயற்பாட்டில்
Answer: அ) குழு செயற்பாட்டில்
4. லூதர் கல்லிக் ___. என்ற முக்கிய வார்த்தையை விளக்கமளித்துள்ளார்.
(a) CORBDOS
(b) COPOSRB
c)POSDCORB
(d) BROCSOP
Answer : c)POSDCORB
5. திட்டமிடல் பார்க்கிறது.
6. ____மேலாண்மையின் அடிப்படை பணியாகும்.
(அ) ஒழுங்கமைத்தல்
(ஆ) இயக்குதல்
(இ) கட்டுப்படுத்தல்
(ஈ ) திட்டமிடல்
Answer : (ஈ ) திட்டமிடல்
7.நி றுமகட்டமைப்பிலுள்ளகா லியிடங்களை நிரப்புவது _______ ஆகும்.
(அ) பணியமர்த்தல்
(ஆ) இயக்குதல்
(இ) கட்டுப்படுத்தல்
(ஈ) ஒழுங்கமைத்தல்
Answer (அ)பணியமர்த்தல்
8. __ என்பது நிறுவன நோக்கங்களுக்கு
பங்களிக்கcஊழியர்களுக்கு வழிகாட்டும் செயல் முறையாகும்.
(அ)ஒருங்கிணைத்தல்
(ஆ) கட்டுப்படுத்தல்
(இ) இயக்குதல்
(ஈ) திட்டமிடல்
Answer (இ)இயக்குதல்
9. ______________ நடவடிக்கைகள் பொதுவாக அளவீடு மற்றும் சாதனை தொடர்பானவை.
(அ) திட்டமிடல்
(ஆ) கட்டுப்படுத்தல்
(இ) இயக்குதல்
(ஈ) ஒழுங்கமைத்தல்
Answer (ஆ) கட்டுப்படுத்தல்
10. ________ நிலை மேலாண்மையில் வியாபாரத்தின் கொள்கைகள் உருவாக்கப்படுகிறது.
(அ) மேல்
(ஆ) கீழ்
(இ) இடை
(ஈ) செங்குத்தான
Answer (அ)மேல்
11. __ என்பது படைப்புச் சிந்தனையாகும்.
(அ) தன்னனார்வ நிலை
(ஆ) பணியாளர் ஒற்றுமை
(இ) ஒழுங்கு
(ஈ) மையப்படுத்தல்
Answer (அ) தன்னனார்வ நிலை
12.___________ கோட்பாடு அதி்காரம் மேல்நி்லையிலிருந்து கீழ் நோக்கி வருவதைக் குறிக்கி்றது.
(அ) கட்டளை ஒருமை
(ஆ) தர வரிசை
(இ) தனி நலன்
(ஈ) அதி்காரம்
Answer ; ஆ) தர வரிசை
பகுதி ஆ
1.மேலாண்மை என்றால் என்ன ?
மேலாண்மை :
மேலாண்மை என்பது மற்றவர்களை நிர்வகிக்கும் கலை மற்றும் அறிவியல் ஆகும்.
மேலாண்மை என்பது "மற்றவர்கள் மூலம் வேலைகளைச் செய்தல் ஆகும்".
2. மேலாண்மை வரையறு.
மேலாண்மை வரைவிலக்கணம் :
1. மேரி பார்க்கர் ஃபோலட் என்ற அறிஞரின் கூற்றுப்படி, "மேலாண்மை என்பது பிறரிடமிருந்து வேலைகளை செய்து பெறும் கலையாகும்".
2. ஹென்றி ஃபயோல் அவர்களின் கூற்றுப்படி, "ஒரு செயலை திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, ஆணையிட்டு, ஒருங்கிணைத்து, கட்டுப்படுத்துவதற்கு முன்னறிவிக்கும் பணியாகும்".
3. F.W. டெய்லர் அவர்களின் கூற்றுப்படி, "தனது பணியாட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதுடன் அவர்கள் அதை சிறந்த மற்றும் சிக்கனமான வழியில் செய்கிறார்களா என்று கவனித்து அறியும் கலையாகும்."
3.மேலாண்மையின் மூன்று நிலைகள் என்ன ?
மேலாண்மையின் மூன்று நிலைகள் :
1. மேல் நிலை மேலாண்மை :
இதில் இயக்குனர்கள் குழு, கூட்டத்தலைவர், மேலாண்மை இயக்குநர் போன்றோர் அடங்குவர்.
2. இடை நிலை மேலாண்மை :
இதில் கொள்முதல், உற்பத்தி மேலாளர், நிதி மேலாளர், சந்தையிடு மேலாளர் போன்றோர் அடங்குவர்.
3. கடை நிலை மேலாண்மை :
இதில் அலுவலக மேலாளர்கள், ஃபோர்மேன்கள், மேற்பார்வை யாளர்கள் போன்றோர் அடங்குவர்.
4. மேலாண்மையின் பணிகளை லூதர் கல்லிக் எவ்வாறு விளக்கியுள்ளார்?
லூதர் கல்லிக் அவர்களின் மேலாண்மை பணிக்கான விளக்கம் :
லூதர் கல்லிக் அவர்கள் மேலாண்மைப் பணிகளை 'POSDCORB என்ற முக்கிய வார்த்தையைக் கொண்டு விளக்கியுள்ளார். அதாவது;
P - Planning - திட்டமிடுதல்
0 - Organising - ஒழுங்கமைத்தல்
S - Staffing - பணியமர்த்தல்
D - Directing - இயக்குதல்
CO - coordinating - ஒருங்கிணைத்தல்
R - Reporting - அறிக்கையிடுதல்
B - Budgeting - திட்டப்பட்டியல் தயாரித்தல்
5.மேலாண்மையின் பணிகள் யாவை ?
மேலாண்மையின் பணிகள் :
1. திட்டமிடுதல்
2. ஒழுங்கமைத்தல்
3. பணியமர்த்தல்
4. இயக்குதல்
5. ஒருங்கிணைத்தல்
6. கட்டுப்படுத்தல்
6.முடிவெடுத்தல் - வரையறு.
முடிவெடுத்தல் - வரைவிலக்கணம் :
ஜார்ஜ் டெர்ரி அவர்களின் கூற்றுப்படி, “முடிவெடுத்தல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாற்று முறைகளிலிருந்து சிறந்த பணிக்கு தேவையான முடிவை தேர்ந்தெடுத்தல் ஆகும்”.
பிலிப் காட்லர் அவர்களின் கூற்றுப்படி, "மாற்று நடவடிக்கைகளுள் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதே முடிவெடுத்தல் ஆகும்".
7. இயக்குதலில் ஒருமை என்றால் என்ன ?
இயக்குதலில் ஒருமை :
இது ஹென்றி ஃபயோல் அவர்கள் அளித்த 14 கோட்பாடுகளில் ஒன்றாகும்.
நிறுவனத்தின் மேலதிகாரி மற்றும் கீழ்ப்பணியாளர்கள் ஒரே திசையில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
அதாவது, நிறுவனத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் நிறுவனத்தின் பொதுவான குறிக்கோளுக்காக செயல்பட செய்ய வேண்டும்.
8. பணிப் பாதுகாப்பு என்றால் என்ன ?
பணிப் பாதுகாப்பு :
இது ஹென்றி ஃபயோல் அவர்கள் அளித்த 14 கோட்பாடுகளில் ஒன்றாகும்.
நிறுவனத்திலுள்ள பணியாளர்களுக்கு அவர்களின் வேலைக்கான பாதுகாப்பினையும் மற்றும் நிலைத்தன்மையையும் வழங்க வேண்டும் என்பதாகும்.
ஒரு பணியாளருக்கு, எந்நிலையிலும் தனது வேலைக்கு பாதிப்பு வராது என்ற உத்திரவாதம் இருக்கும் பட்சத்தில் அவர் சிறந்த திறனுடன் பணிபுரிவார்.
பகுதி - இ
1.திட்டமிடுதலின் முக்கிய நோக்கங்கள் யாவை ?
திட்டமிடுதலின் முக்கிய நோக்கங்கள் :
ஹரால்ட் கூன்ஸ் அவர்கள் திட்டமிடுதல் கீழ்வரும் நான்கு நோக்கத்திற்கானது என்று கூறுகிறார்.
1. நிச்சயமற்ற தன்மையையும், மாற்றத்தையும் எதிர்கொள்ளுதல்.
2. நிறுவன இலக்குகளில் கவனம் செலுத்துதல்.
3. சிக்கனமான செயல்பாட்டின் நன்மைகளை அடைதல்.
4. கட்டுப்பாட்டிற்கு உதவுதல்.
திட்டமிடுதல் மேலாண்மையின் அடிப்படை பணி ஆகும். அது மேலாண்மையின் மற்ற பணிகளை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது.
2. ஒழுங்கமைத்தலில், நிறுவனத்தின் நிர்வாக செயல்பாடுகள் யாவை ?
ஒழுங்கமைத்தலில், நிறுவனத்தின் நிர்வாக செயல்பாடுகள் :
1. நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய தேவையான பணிகளை அல்லது வேலைகளைக் கண்டறிந்து வகைப்படுத்துகிறது.
2. நோக்கங்களை அடைவதற்கு பணிகள் அல்லது வேலைகள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்படுகிறது.
3. ஒவ்வொரு குழுவின் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் மேலாளர், சிறந்த முறையில் நிர்வகிக்க தேவையான அதிகாரத்தை ஒப்படைவு செய்கிறது.
4. அமைப்பின் கட்டமைப்பில் கிடைமட்டமாகவோ (அதே அமைப்பு) அல்லது செங்குத்தாகவோ (தலைமையகம் மற்றும் துறைகள்) ஒருங்கிணைப்புக்கான ஏற்பாடுகளை செய்கிறது.
3. முடிவெடுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக.
முடிவெடுத்தல்:
முடிவெடுத்தல் என்பது கிடைக்கக்கூடிய பல மாற்று வழிகளில் இருந்து சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்கும் செயல்முறையைக் குறிக்கிறது.
பல்வேறு மாற்று வழிகள் இருக்கும்பொழுதுதான், முடிவெடுத்தல் அவசியமாகிறது.
.ஒரு வேலையை செய்து முடிக்க ஒரே ஒரு வழி இருக்கும்பொழுது முடிவெடுத்தலுக்கு அவசியம் இருக்காது.
முடிவெடுத்தல் வரைவிலக்கணம் :
பிலிப் காட்லர் அவர்களின் கூற்றுப்படி, "மாற்று நடவடிக்கைகளுள் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதே முடிவெடுத்தல் ஆகும்".
முடிவெடுத்தலுக்கு எடுத்துக்காட்டு :
இயந்திரங்களை வாங்க விரும்பும் ஒரு நிறுவனம் இயந்திரங்களின் பல மாதிரிகளை பெறலாம். ஆகவே, அவற்றில் எந்த மாதிரி சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாதிரிகளின் நன்மைகள், தீமைகளை ஆய்வு செய்வதன் மூலம் அவற்றில் சிறந்த மாதிரியை மற்றும் அதிக நன்மைகளை தரும் மாதிரியை அந்நிறுவனம் தேர்ந்தெடுக்கிறது.
பகுதி .ஈ
1.மேலாண்மைப் பணிகளை விரிவாக எழுதுக.
மேலாண்மையின் பணிகள் :
1. திட்டமிடுதல் :
திட்டமிடுதல் பணியில் நிறுவனத்தின் முக்கிய நோக்கத்தை முடிவு செய்து, அதற்கான சட்ட விதிகளை வடிவமைத்து, செயல்முறைகள் அமைத்து, கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி, திட்டப்பட்டியல் தயார் செய்து வைப்பதாகும்.
திட்டமிடுதலை குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கும் திட்டமிடலாம்.
மேலாளர் அனைத்து நிலைகளுக்கும் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.
திட்டமிடுதல் எதிர்காலத்தை சார்ந்ததாகும்.
திட்டமிடுதல் எந்த ஒன்றையும் முன்கூட்டியே தீர்மானித்து எப்படி, யார், எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதாகும்.
திட்டமிடுதல் மேலாண்மையின் அடிப்படை பணி ஆகும். அது மேலாண்மையின் மற்ற பணிகளை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது.
2. ஒழுங்கமைத்தல் :
ஒழுங்கமைத்தல் பணியில் நிறுவனத்தின் ஆக்கபூர்வமான அதிகார கட்டமைப்பினை உருவாக்கி, சம்பந்தப்பட்ட துணைப்பிரிவுகளை அமைத்து, அதன் மூலம் நிறுவன நோக்கத்தை செவ்வனே செய்து முடிப்பதாகும். இதில்,
நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய தேவையான பணிகளை அல்லது வேலைகளைக் கண்டறிந்து வகைப்படுத்துகிறது.
நோக்கங்களை அடைவதற்கு பணிகள் அல்லது வேலைகள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு குழுவின் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் மேலாளர், சிறந்த முறையில் நிர்வகிக்க தேவையான அதிகாரத்தை ஒப்படைவு செய்கிறது.
3. பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது நிறுவனத்தின் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள தேவையான மற்றும் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆள் தேர்வு செய்தல், ஆள் சேர்த்தல், பயிற்சியளித்தல், பணி மாற்றம் செய்தல்,பதவி உயர்வு அளித்தல் போன்றவை இதில் அடங்கும்.
இது எல்லா மேலாண்மை நிலையிலும் நடைபெறுகிறது.
4. இயக்குதல் :
இயக்குதல் என்பது நிறுவன நோக்கங்களுக்குப் பங்களிக்க பணியாளர்களுக்கு வழி காட்டும் செயல் முறையாகும்.
ஏனர்ஸ்ட் டேல் அவர்களின் கூற்றுப்படி, இயக்குதல் என்பது மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும், அவர்களின் திறன்களுக்கு ஏற்றவாறு எப்படி செய்யவேண்டும் என்பதையும், எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் கவனித்தல் ஆகும்.
இதில், பணி ஆணைகள் வழங்குதல், பணிக்கான நடைமுறைகளை அளித்தல், பணிக்கான அறிவுறுத்தல்களை வழங்குதல், தவறுகள் ஏற்பட்டால் அவற்றை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
இது பின்வரும் துணைப் பணிகளை மேற்கொள்கிறது.
ஊக்குவித்தல்
தலைமையேற்றல்
மேற்பார்வையிடுதல்
தொடர்புகொள்ளுதல்
ஒருங்கிணைத்தல்.
5. ஒருங்கிணைத்தல் :
நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தங்களுக்கென்று தனி நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறது. அவை அனைத்தும் நிறுவனத்தின் நோக்கத்தை நோக்கி செயல்படுகின்றன.
. ஒரு நிறுவனத்தின் ஒவ்வொரு துறையும் தங்களது பணிகளைத் தாமே செய்து கொள்கிறது.
ஆனால், அதே சமயம், ஒரு துறையின் நடவடிக்கையானது மற்ற துறையின் நடவடிக்கைக்கு தேவையானதாகவோ அல்லது சார்ந்தோ இருக்கலாம்.
எடுத்துக்காட்டு :
உற்பத்தித் துறை, கொள்முதல் துறையைச் சார்ந்திருக்கிறது. உற்பத்தி செய்யப்படவேண்டிய பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் துறை வாங்குகிறது.
இவ்வாறாக ஒவ்வொரு துறையும், ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும் ஒன்றை ஓன்று சார்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஆகவே, அனைத்துப்பணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளும் தங்களுடைய பணிகளை சரியாக மேற்கொள்கின்றன என்பதை ஒருங்கிணைத்தல் பணி உறுதி செய்கிறது.
6. கட்டுப்படுத்தல் :
கட்டுப்படுத்தல் என்பது தரநிலைகளை அமைப்பதை உள்ளடக்கியதாகும்.
செயல் நிறைவேற்றத்தை தரநிலைகளோடு ஒப்பிட்டு, விலகல்களைக் கண்டறிந்து, சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
எனவே, நிறுவனங்கள் சரியான கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுவதன் மூலம் மட்டுமே நிறுவன நோக்கங்களை அடைய முடியும்.
இது பொதுவாக அளவீடு மற்றும் சாதனை தொடர்பானவை.
ஒவ்வொரு கட்டுப்பாட்டு அளவீடும் திட்டங்கள் செயல்படுகிறதா இல்லையா என்பதைக் காட்டுகிறது.
2.மேலாண்மையின் நிலைகளை விரிவாக எழுதுக.
1. மேல்நிலை மேலாண்மை :
இதில் இயக்குனர்கள் குழு, கூட்டத்தலைவர், மேலாண்மை இயக்குநர் போன்றோர் அடங்குவர்.
இதன் பணிகள் பின்வருமாறு;
1. வியாபாரத்தின் அடிப்படை நோக்கங்களை நிர்ணயித்தல்.
2. வியாபாரத்தின் கொள்கைகளை உருவாக்குதல்.
3. நிறுவன நோக்கங்களை அடையும் வகையில், நிறுவன நடவடிக்கைகளை பல்வேறு துறைகளாக ஒழுங்கமைத்தல்.
4. துறைத் தலைவர்களை நியமித்தல் மற்றும் அவர்களது செயல் நிறைவேற்றத்தை மறு ஆய்வு செய்தல்.
5. நிறுவனத்தின் சார்பாக, அரசு, தொழிற்சங்கங்கள் போன்ற வெளிநபர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருத்தல்.
2. இடை நிலை மேலாண்மை :
இதில் கொள்முதல், உற்பத்தி மேலாளர், நிதி மேலாளர், சந்தையிடு மேலாளர் போன்றோர் அடங்குவர். மேலும், இதில் அனைத்துத் துறைகளிலும் உள்ள துணை மேலாளர்களும் அடங்குவர்.
இதன் பணிகள் பின்வருமாறு;
1. துறையளவில் பொருத்தமான கொள்கைகளை உருவாக்குதல்.
2. குறித்த கால இடைவெளிகளில் செயல் நிறைவேற்றத்தை மறு ஆய்வு செய்தல்.
3. துறையிலுள்ள கீழ்நிலைப்பணியாளர்களுடன் தொடர்பு வைத்திருத்தல்.
3. கடை நிலை மேலாண்மை (மேற்பார்வை நிலை மேலாண்மை):
இதில் அலுவலக மேலாளர்கள், ஃபோர்மேன்கள், மேற்பார்வை யாளர்கள் போன்றோர் அடங்குவர்.
இதன் பணிகள் பின்வருமாறு ;
1. அன்றாட வேலைகளை திட்டமிடல்.
2. அனைத்துப் பணியாளர்களையும் மேற்பார்வை செய்தல்.
3. அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தல்.
4. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இடைநிலை மேலாளர்களுக்கு அறிக்கைகள் அனுப்புதல்.
3. நிர்வாகத்தின் கோட்பாடுகளை விரிவாக எழுதுக.
நிர்வாகத்தின் கோட்பாடுகள் :
ஹென்றி ஃபயோல் அவர்கள் ஒரு நிறுவனம் பின்பற்ற வேண்டிய 14 கோட்பாடுகளை பட்டியலிட்டுள்ளார்கள். அவை பின்வருமாறு:
1. வேலைப் பகிர்வு
நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பணிகளையும், பல்வேறு குழுக்கள் அல்லது துறைகளுக்கு பகிர்ந்தளிப்பது வேலைப் பகிர்வு ஆகும். வேலைகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் வேலைகள் குறைந்த செலவிலும், குறைந்த நேரத்திலும் சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது.
2. அதிகாரம் மற்றும் பொறுப்பு :
அதிகாரம் என்பது ஆணைகள் மற்றும் அறிவுறுத்தல் வழங்க மேலதிகாரியிடம் உள்ள உரிமையாகும். பொறுப்பு என்பது பணியை முடிக்க வேண்டிய கடமை ஆகும்.
ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிக்கத் தேவையான அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அனைவரும் தனது வேலையை பொறுப்புடன் முடிக்க வேண்டும்.
3. ஒழுக்கம் :
நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
4. கட்டளை ஒருமை :
நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு கீழ் நிலைப் பணியாளரும் ஒரே ஒரு உயர் அதிகாரியிடமிருந்துதான் உத்தரவு மற்றும் ஆணைகளை பெறவேண்டும்.
5. இயக்குவித்தலில் ஒருமை :
நிறுவனத்தின் மேலதிகாரி மற்றும் கீழ்ப்பணியாளர்கள் நிறுவன நோக்கத்தை அடையும் பொருட்டு ஒரே திசையில் மட்டுமே பயணிக்கவேண்டும்.
6. தனி நலனை பொது நலனாக மாற்றுதல் :
பணியாளர்கள் தனிப்பட்ட நலனைப் பற்றி சிந்திக்காமல் நிறுவனத்தின் பொதுவான நலன்களுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும்.
7. பணியாளர்களின் ஊதியம் :
பணியாளர்களுக்கு தொழில் துறை வழிக்காட்டுதலின் படி ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
8. மையப்படுத்துதல் :
இது அதிகாரம் தனிப்பட்ட நபரிடம் அல்லது மேல்நிலையில் குவிந்திருப்பதைக் குறிக்கிறது.
9. தர வரிசை கோட்பாடு :
இக் கோட்பாடு அதிகாரம் மேல்நிலையிலிருந்து கீழ் நோக்கி வருவதைக் குறிக்கிறது.
10.ஒழுங்கு :
பணியாளர்களையும், அவர்களோடு தொடர்புடைய பொருட்களையும் சரியான இடங்களில் பொருத்தவேண்டும். அதாவது, ஒவ்வொரு பணியாளருக்கும் அவரின் தகுதிக்கேற்ப இடத்தை அளிக்கவேண்டும்.
11. சம நிலை :
அனைத்துப் பணியாளர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
12.பணிப் பாதுகாப்பு :
பணியாளர்களுக்கு அவர்களின் வேலைக்கான பாதுகாப்பினையும் மற்றும் நிலைத்தன்மையையும் வழங்க வேண்டும்.
13.தன்னார்வ நிலை :
பணியாளர்களை தன்னார்வத்தோடு பணிபுரியவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் அனுமதிக்க வேண்டும். அது அவர்களின் திறனை அதிகரிக்கும்.
14.பணியாளர் ஒற்றுமை (Espirit De Corps) :
ஒற்றுமையே வலிமை என்ற கொள்கைக்கு ஏற்ப மேல்நிலைப் பணியாளர்கள் மற்றும் கீழ்நிலைப்பணியாளர்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment