Kalvi mini Important questions with study material important Question paper pdf Download.

12th Economics - Unit 8 : Book Back Answers guide

Tamil Nadu Board 12th Standard Economics - Unit 8 : Book Back Answers and Solutions

    This post covers the book back answers and solutions for Unit 8 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at samacheerkalvi.net

    We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

    By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 8 along with the corresponding book back questions and answers (PDF format).

Question Types Covered:

1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 

2 Mark Questions: Answer briefly 

3, 4, and 5 Mark Questions: Answer in detail

All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

இயல் 8:பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்

I. சரியான விடையை தேர்வு செய்க.

1. பன்னாட்டு பண நிதியம் கீழ்க்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது

அ) பான்டுங் மாநாடு

ஆ) சிங்கப்பூர் மாநாடு

இ) பிரிட்டன் வூட்ஸ் மாநாடு

ஈ) தோஹா மாநாடு

விடைகுறிப்பு: 

இ) பிரிட்டன் வூட்ஸ் மாநாடு


2. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

அ) வாஷிங்டன் டி.சி

ஆ) நியூ யார்க்

இ) வியன்னா

ஈ) ஜெனிவா

விடைகுறிப்பு: 

அ) வாஷிங்டன் டி.சி


3. ஐபிஆர்டி இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது

அ) பன்னாட்டு பணநிதியம்

ஆ) உலக வங்கி

இ) ஆசியான்

ஈ) பன்னாட்டு நிதி கழகம்

விடைகுறிப்பு: 

ஆ) உலக வங்கி


4. சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்

அ) தாள் தங்கம்

ஆ) பங்களவுகள்

இ) தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்

ஈ) இவை எதுமில்லை

விடைகுறிப்பு: 

அ) தாள் தங்கம்


5. நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம்

அ) உலக வங்கி

ஆ) பன்னாட்டுப் பண நிதியம்

இ) உலக வாணிக அமைப்பு

ஈ) பிரிக்ஸ்

விடைகுறிப்பு: 

அ) உலக வங்கி


6. கீழ்காணும் நாடுகளில் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?

அ) இலங்கை

ஆ) ஜப்பான்

இ) வங்காளதேசம்

ஈ) ஆப்கானிஸ்தான்

விடைகுறிப்பு: 

ஆ) ஜப்பான்


7. பன்னாட்டு மேம்பாட் டு அமைப்பு கீழ்க்கண்ட இதன் துணை அமைப்பாகும்

அ) பன்னாட்டுப் பண நிதியம்

ஆ) உலக வங்கி

இ) சார்க்

ஈ) ஆசியான்

விடைகுறிப்பு: 

ஆ) உலக வங்கி


8. காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக இரகசியம் முதலானவை ________ உடன் தொடர்புடையவை.

அ) வணிகம் சார் சொத்துரிமை

ஆ) வணிகம் சார்ந்த முதலீட்டு வழிமுறைகள்

இ) காட்ஸ்

ஈ) NAMA

விடைகுறிப்பு:

 அ) வணிகம் சார் சொத்துரிமை


9. உலக வாணிக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்.

அ) சிங்கப்பூர்

ஆ) ஜெனிவா

இ) சியாட்டில்

ஈ) டோஹா

விடைகுறிப்பு: 

அ) சிங்கப்பூர்


10. ஆசியான் கூட்டங்கள் _________ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

விடைகுறிப்பு: 

ஆ) 3


11. கீழ்காண்பவற்றில் எது SAARC உறுப்பினர் நாடு அல்ல?

அ) பாகிஸ்தான்

ஆ) ஸ்ரீலங்கா

இ) பூடான்

ஈ) சீனா

விடைகுறிப்பு:

 ஈ) சீனா


12. சார்க் உச்சி மாநாடு ___________ ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

விடைகுறிப்பு: 

அ) 2


13. ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்.

அ) ஜகார்த்தா

ஆ) புது டெல்லி

இ) கொழும்பு

ஈ) டோக்கியே

விடைகுறிப்பு: 

அ) ஜகார்த்தா


14. பிரிக்(BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு.

அ)  2001

ஆ)2005

இ)2008

ஈ) 2010

விடைகுறிப்பு: 

அ)  2001


15. ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு.

அ) 1965

ஆ)1967

இ)1972

ஈ) 1997

விடைகுறிப்பு: 

ஆ) 1967


16. பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜீலை 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடம்.

அ) பீஜிங்

ஆ) மாஸ்கோ

இ) ஜோகனஸ் பர்க்

ஈ) பிரசிலியா

விடைகுறிப்பு: 

இ) ஜோகனஸ் பர்க்


17. புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன் தொடர்புடையது.

அ) பிரிக்ஸ்

ஆ) டபிள்யூ.டி.ஒ

இ) சார்க்

ஈ)ஆசியான்

விடைகுறிப்பு: 

அ) பிரிக்ஸ்


18. ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) இந்தியா

ஈ) வடகொரியா

விடைகுறிப்பு:

ஈ) வடகொரியா


19. சார்க் வேளான் தகவல் மையம் துவங்கிய ஆண்டு.

அ) 1985

ஆ)1988

இ )1992

ஈ)1998

விடைகுறிப்பு: 

ஆ)1988


20. பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்.

அ) தடையற்ற வாணிகப்பகுதி

ஆ) பொருளாதார ஒன்றியம்

இ) பொது அங்காடி

ஈ) சுங்கவரி ஒன்றியம்

விடைகுறிப்பு: 

ஈ) சுங்கவரி ஒன்றியம்




II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

21. சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.

விடைகுறிப்பு:

பன்னாட்டு பண நிதியத்துடன் கையிருப்பாக உள்ள உறுப்பினர் நாடுகளின் பணமே சிறப்பு எடுப்புரிமையாகும்.

சிறப்பு எடுப்புரிமைகள் என்பது தான் தங்கம் என அழைக்கப்படுகிறது.


22 . ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.

விடைகுறிப்பு:

பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி மற்றும் பண்பாட்டு மாற்றத்தை துரிதப்படுத்துவது.

அமைதி மற்றும் உறுதியான சூழ்நிலையை மேம்படுத்துவது.


23. ஐபிஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுக.

விடைகுறிப்பு:

வங்கியின் இருப்பிலுள்ள சொந்த நிதியிலிருந்து கடன் வழங்குவது.

ஈட்டுறுதி வழங்கி கடன் பெற்றுத் தருவது.


24. பொதுச் சந்தை வரையறு.

விடைகுறிப்பு:

புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தடையற்ற வாணிகம் மற்றும் உற்பத்திக் காரணிகள் இடம் பெயர்வுக்காக அமைக்கும் அமைப்பே பொதுச் சந்தை எ.கா. ஐரோப்பிய பொது அங்காடி.


25. தடையற்ற வாணிகப்பகுதி என்றால் என்ன?

விடைகுறிப்பு:

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாக கருதி வாணிகத் தடைகளை குறைக்க ஒத்துழைக்கும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. எ.கா. SAFTA


26. எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவக்கப்பட்டது?

விடைகுறிப்பு:

நேபாள் தலைநகரம் காட்மண்டுவை தலைமைச் செயலகமாகக் கொண்டு ஜனவரி 16, 1987-ல் செயல்படத் துவங்கியது.


27. உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடைகுறிப்பு:

பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA)

பன்னாட்டு நிதிக்கழகம் (IFC)



III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

28. பொருளாதார ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.

விடைகுறிப்பு:

தடையற்ற வாணிகப் பகுதி

சுங்கவரி ஒன்றியம்

பொது சந்தை

பொருளாதார ஒன்றியம்


29. வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன?

விடைகுறிப்பு:

சில நாடுகள் வாணிபத்தில் போட்டியை தவிர்க்க பிறநாட்டுப் பொருளாதாரத்துடன் தங்களுடைய பொருளாதாரத்தை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.

தடையற்ற வாணிகப்பகுதி, சுங்கத்தீர்வை ஒன்றியம், பொதுச்சந்தை மற்றும் பொருளாதார ஒன்றியம் ஆகிய வடிவங்களில் பொருளாதார ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.


30. ஐஎம்எப் -ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக

விடைகுறிப்பு:

அடிப்படை கடன் வசதி

விரிவாக்கப்பட்ட நிதி வசதி

ஈடுசெய் நிதி வசதி

தாங்கிருப்பு வசதி


31. பலதரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

விடைகுறிப்பு:

வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற பணிகளில் பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்குத் தேவையான சாதகமான விதிகளை முதன்முதலில் தொகுத்துக் கொடுத்த முதலாவது பன்னாட்டு ஒப்பந்தமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.


32. பிரிக்ஸ் மாநாடு 2018 நிகழ்ச்சி பற்றி எழுதுக.

விடைகுறிப்பு:

பத்தாவது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவில் ஜூலை 2018-ல் நடைபெற்றது.

இதில் உள்ளடக்கிய வளர்ச்சி , வாணிக பிரச்சனைகள்,உலகளாவிய அரசு நிர்வாகம், பகிரத்தக்க வளமை, நாடுகளின் அமைதி மற்றும் பாதுாப்பு ஆகியவையே இந்த உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாகும்"


33. சார்க்கிள் பணிகளை சுருக்கமாகக் கூறுக.

விடைகுறிப்பு:

தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பை பராமரித்தல்.

உறுப்பினர் நாடுகளின் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீவு கானுதல்

உறுப்பினர் நாடுகளுக்கிடையே உறவை மேம்படுத்துதல்

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பது

பயங்கரவாத செயல்களைத் தடுப்பது.


34. பிரிக்ஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிடுக

விடைகுறிப்பு:

அவசரகால கையிருப்பு வசதியை உருவாக்கியதால் உறுப்பினர் நாடுகளின் பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுதலை பலப்படுத்தியது ஒரு சாதனையாகும்.

பிரிக்ஸ் வங்கியை சீனாவின் சாங்காயில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும் விதமாக பிரிக்சின் ஆறாவது மாநாட்டின் முடிவு செய்தபடி அமைந்தது ஒரு சாதனையாகும்.

பொருளாதார பலமும் மக்கள்தொகை வளமும் பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் பன்னாட்டு உறவு நிர்வாகத்தில் கூடுதல் ஆதிக்கம் பெறும் நிலைமை பெற்றுள்ளது.

 

IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி


35. பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்கும்

விடைகுறிப்பு:

உறுப்பு நாடுகளுக்கிடையே பள்ளாட்டு பரிவர்த்தனையில் பணவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவது.

பன்னாட்டு வாணிபம் வேகமாகவும் சமச்சீராகவும் வளர உதவுகிறது.

உறுப்பு நாடுகள் பண மதிப்பிறக்கம் செய்வதை தடுத்து நாணய மாற்று விகிதம் நிலையாக இருக்கா செய்தல்.

உறுப்பு நாடுகள் விதிக்கும் செலாவணிக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல்.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் மூலதனம் செய்வதை எளிதாக்குவது.

பன்னாட்டு நீர்மைப் பிரச்சினைக்கு தீர்வு காணபது.


36. உலக வங்கியின் பணிகளை வெளிக்கொணர்க.

விடைகுறிப்பு:

உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி

பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி.

கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல்.

வெளிநாட்டு தனியார் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல்

தொழிலநுட்ப சேவைகள்


37. இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடி வின் பங்கினை விவாதிக்க.

விடைகுறிப்பு:

இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் இடு பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு குறைவான விலையில் அதிகமாக கிடைத்துள்ளது.

நாடுகளுடன் தனித்தனியே ஒப்பந்தம் போடாமல் பலநாடுகளில் இந்தியா பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது.

குறைந்த செலவில் உயர்வகை தொழில்நுட்பம் கிடைத்துள்ளது.

பள்னாட்டு பரிவர்த்தனை தொடர்புள்ள புகார்களுக்கு எளிதில் நிர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. பரந்த சந்தை தகவலிலிருந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் பலனடைகின்றனர்.


38. குறிப்பு எழுதுக.

(அ) சார்க்

(ஆ) பிரிக்ஸ்.

விடைகுறிப்பு:

 

 (அ) சார்க்

தெற்காசிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்காக டிசம்பர் B. 1985-ல் துவக்கப்பட்ட அமைப்பு ஆகும்

வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய

நாடுகள் உறுப்பு நாடுகளாகும்.

நேபான் தலைநகரம் காட்மண்டு இதன் தலைமைச் செயலகமாக ஜனவரி 6, 1987-ல் செயல்படத் துவங்கியது

முதல் உச்சி மாநாடு 1985-ல் வங்காளதேசத்தில் நடைபெற்றது

200-வது உச்சி மாநாடு இலங்கையில் 2018-ல் நடைபெற்றது.

(ஆ) பிரிக்ஸ்

பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின்

முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப் பெயர் "பிரிக்ஸ்" ஆகும்.

2009-லிருந்து உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன

10-வது உச்சி மாநாடு 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்றது

இதில் உள்ளடக்கிய வளர்ச்சி, வாணிகப் பிரச்சினைகள், உலகளாவிய அரசு நிர்வாகம், பகிரத்தக்க வளமை, நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே இந்த உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாகும்.

சீனாவில் ஷாங்காய் நகரில் பிரிக்ஸ் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

இதன் முதல் மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.

இந்தியாவில் நான்காவது மாநாடு 2012லும் எட்டாவது மாநாடு 2016லும் நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 21 சதவிகிதம் பெற்றுள்ளன. 

Share:

0 Comments:

Post a Comment

Archive

Definition List

Unordered List

Support